×

அரசுக்கு முத்தரசன் வேண்டுகோள் பிளாஸ்டிக் தடையை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

சென்னை: பிளாஸ்டிக் தடை குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள  சிறு, குறு பிளாஸ்டிக் தொழில் முனைவோர் தயாரிக்கும் பிளாஸ்டிக்குக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு தொழில் முனைவோர் தயாரிக்கும் மறுசுழற்சி செய்யக் கூடிய பொருள்கள் மட்டுமே தயாரிக்கின்றனர்.  இத்தகைய பிளாஸ்டிக்குக்குத்தான் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. ஆனால், கார்ப்பரேட் நிறுவனங்கள் தயாரிக்கும் பிளாஸ்டிக்குகள் மறுசுழற்சி செய்ய முடியாதவை ஆகும். அதனை தமிழ்நாடு அரசு தடை செய்யவில்லை  என்பது ஏன் என்ற கேள்வி எழுகின்றது.

சிறு,குறு தொழில் முனைவோர், வங்கி மற்றும் தனியாரிடம் கடன் பெற்றும், தங்களின் நகை மற்றும் சொத்துக்களை அடமானம் வைத்தும், அதனை விற்பனை செய்தும், இத்தொழிலில் முதலீடு செய்துள்ளனர்.திடீர் தடை காரணமாக அவர்களின் வாழ்வுரிமை கேள்விக்குறியாகிறது. முதலீடு செய்தவர்கள் மட்டுமின்றி 5 லட்சத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் சங்கம் சார்பில்  தங்களது கோரிக்கைகள் குறித்து அரசிடம் தொடர்ந்து எடுத்துக்கூறியும் பயனளிக்காத நிலையில் டிசம்பர் 18ம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளனர். தமிழ்நாடு அரசு இனியும் காலம் தாழ்த்தாது, பிளாஸ்டிக் தொழிலில்  ஈடுபட்டுள்ள சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் அதனை நம்பியுள்ள 5 லட்சம் தொழிலாளர்கள் நலன்களை கவனத்தில் கொண்டு, பிளாஸ்டிக் தடை குறித்து மறுபரிசீலனை செய்திட வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government , Muthurasan, request,government, Plastic barrier, Need to review
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...